குழந்தைகள் உங்கள் மீதான தங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்துவார்கள் தெரியுமா?


Alagar Raj AP
30-10-2024, 13:44 IST
www.herzindagi.com

ஒன்றாக இருப்பது

    உங்களுடன் ஒன்றாக நேரத்தை செலவிட ஆசைப்படுவார்கள். உங்களுடன் இருக்கும் போது அகுழந்தைகள் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

உணவை பகிர்தல்

    உரையாடலுக்கு அப்பால், நாம் நம்மை வெளிப்படுத்தும் முக்கிய வழிகளில் ஒன்று உணவு. உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாக குழந்தைகள் உங்களிடம் உணவுகளை பகிர்ந்து கொள்வார்கள்.

கவனத்திற்காக அழுவது

    நீங்கள் குழந்தைகள் மேல் கவனம் செலுத்த தவறினால், அவர்கள் உங்கள் கவனத்திற்காக அழுவார்கள். நீங்கள் அவர்களுடன் எப்போதும் இருக்க வேண்டுமனென்று குழந்தைகள் விரும்புவார்கள்.

வழக்கமான செயல்கள்

    குழந்தைகளுக்கு உங்கள் மீது அன்பு இருந்தால் அவர்கள் உங்களிடம் இருந்து வழக்கமான செயல்களை விரும்புவார்கள். உதாரணமாக ஒரு விளையாட்டை விளையாடினால் அதை தினமும் விளையாடுவது அல்லது இரவு கதை கூறினால், தினமும் கதை கூற சொல்வது போன்ற விஷயங்கள் அடங்கும்

பின்தொடர்தல்

    நீங்கள் எங்கு சென்றாலும் பின்தொடர்வது அல்லது நீங்கள் எங்காவது செல்லும் போது உங்களுடன் வர வேண்டும் என்று அடம் பிடிப்பது போன்றவை குழந்தைகள் உங்கள் மீது வைத்துள்ள அன்பின் செயல்கள்.

காட்சிப்படுத்துதல்

    குழந்தைகள் ஏதாவது புதிதாக செய்தால் அதை உங்களிடம் காண்பித்து மகிழ்வார்கள். அது ஓவியம், எழுதுதல், விளையாட்டு பொருட்கள், பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அரவணைப்பு

    குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இருப்பதை விட பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழந்தைகளின் அரவணைப்பு, கையைப் பிடித்து நடப்பது மற்றும் முத்தங்கள் போன்ற அன்பின் வெளிப்பாடாக இருக்கும்.