சாய் அபயங்கர் கைவசம் இத்தனை பெரிய பட்ஜெட் படங்களா?


Alagar Raj AP
22-04-2025, 18:27 IST
www.herzindagi.com

கட்சி சேர

    பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டார். இந்த இண்டிபென்டென்ட் பாடல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.

ஆசை கூட

    அதைத்தொடர்ந்து இவரின் 'ஆசை கூட' மற்றும் ‘சித்திர புத்திரி’ என்ற இரு பாடல்களும் இணையத்தில் மிகப்பெரிய வைரல் ஆனது.

பட வாய்ப்புகள்

    இந்த ட்ரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் இடம் பிடித்த சாய் அபயங்கர்க்கு அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பென்ஸ்

    லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.

சூர்யா 45

    இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அவர் விலகிய நிலையில் சாய் அபயங்கர்க்கு இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிம்பு 49

    இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் 49வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.

பிஆர் 4

    பிரதீப் ரங்கநாதன் கதாநாயகியாக நடித்து வரும் நான்காவது படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

அட்லீ 6

    அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்திற்கும் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார் சாய் அபயங்கர்.