2024ல் எதிர்பாராத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய தமிழ் படங்கள்
Alagar Raj AP
24-12-2024, 15:40 IST
www.herzindagi.com
2024ல் தமிழில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும் அவற்றில் எதிர்பாராத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய சில சிறு பட்ஜெட் படங்கள் லிஸ்ட் இதோ.
பிளாக்
தமிழில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாயின பிளாக் திரைப்படம் ஜீவாவுக்கு கம்பேக் படமாக அமைந்தது. 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
லவ்வர்
குட் நைட் படத்திற்கு பிறகு மணிகண்டன் நடிப்பில் வெளியாகிய லவ்வர் படம் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 ரூபாய் கோடி வரை வசூல் செய்தது.
கருடன்
விடுதலை படத்திற்கு பிறகு சூரி கதையின் நாயகனாக நடித்திருந்த கருடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 44 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
லப்பர் பந்து
பெரும் எதிர்பார்ப்புகள் இன்றி வெளியான லப்பர் பந்து திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
மகாராஜா
விஜய் சேதுபதி நடிப்பில் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் 110 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.