Pongal Playlist: ட்ரெண்ட் செட்டிங் பொங்கல் கொண்டாட்ட சினிமா பாடல்கள்
Alagar Raj AP
10-01-2024, 14:42 IST
www.herzindagi.com
பொங்கல் பண்டிகை என்றாலே இந்த பாடல்கள் தான் என நிணைவுக்கு வரும் தமிழ் சினிமா பொங்கல் கொண்டாட பாடல்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
பொங்கலோ பொங்கல்
பொங்கல் நிகழ்ச்சிகள், போட்டிகள், பட்டிமன்றம் என பொங்கல் என்றாலே இந்த பாடல் தான் முதலில் ஒலிக்கும். அந்த அளவிற்கு பிரபலமான பொங்கலோ பொங்கல் பாடல் மகாநதி படத்தில் இடம் பெற்றிருக்கும். இப்பாடலுக்கு இளையராஜா இசை அமைத்திருப்பார். வாலி வரிகளில் கே.எஸ் சித்ரா பாடியிருப்பார்.
போக்கிரி பொங்கல்
இன்றளவிலும் பள்ளி பொங்கல் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நடனமாட இந்த பாடலை தான் முதலில் தேர்வு செய்வார்கள். அது தான் போக்கிரி படத்தில் இடம் பெற்றிருக்கும் போக்கிரி பொங்கல் பாடல்.
கொம்புல பூவ சுத்தி
விருமாண்டி படத்தில் இடம் பெற்றிருக்கும் கொம்புள்ள பூவ சுத்தி பாடல். ஜல்லிக்கட்டு போட்டிகளில் தொடர்ந்து இன்றளவிலும் ஒலித்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் தீம் பாடல் என்று கூட கூறலாம். இப்பாடலை இளையராஜா எழுதி இசையமைத்திருப்பர். கமல் பாடியிருப்பர்.
வந்தேன்டா பால்காரன்
அண்ணாமலை படத்தில் இடம் பெற்றுள்ள வந்தேன்டா பால்காரன் பாடல் பசு மாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். மாட்டு பொங்கல் தினத்தன்று மாடுகளுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்யும் போது அதிகம் ஒலிக்கும் பாடல். இப்பாடலை தேவா இசையில் வைரமுத்து வரிகளில் எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடியிருப்பார்.
பொதுவாக என் மனசு தங்கம்
பொதுவாக என் மனசு தங்கம் பாடல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தவரை பெருமைப்படுத்தும் விதமாக ஒலிக்க செய்யப்படும். அப்படிப்பட்ட பெருமைக்குரிய பாடல் முரட்டு காளை படத்தில் இடம் பெற்றிருக்கும். இப்பாடலுக்கு இளையராஜா இசையமைக்க பஞ்சு அருணாச்சலம் பாடல் வரிகள் எழுதியிருப்பார், மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார்.
பூ பூக்கும் மாசம்
வருஷம் 16 படத்தில் இடம் பெற்றிருக்கும் பூ பூக்கும் மாசம் பாடல் தை மாதத்தை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். இப்படலுக்கு இளையராஜா இசையமைத்திருப்பர். வாலி வரிகளில் பி. சுசிலா பாடியிருப்பார்.