இந்தாண்டு ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்


sreeja kumar
12-05-2023, 11:57 IST
www.herzindagi.com

லியோ

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - த்ரிஷா நடிக்கும் லியோ திரைப்படம், 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு தியேட்டரில் வெளியிட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Image Credit : google

மாமன்னன்

    உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு சேர்ந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

Image Credit : google

பிச்சைக்காரன் 2

    சசி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தின் 2வது பாகம் அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.

Image Credit : google

விடுதலை 2

    விடுதலை படத்தின் 2வது பாகம் இந்த ஆண்டு வெளியாகிறது. அதற்கான பணியில் படக்குழு திவீரமாக இறங்கியுள்ளது. விடுதலை 2வை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

Image Credit : google

ஃபர்ஹானா

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ஏற்கெனவே வெளியான படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் பெரும் வரவேற்பை பெற்றன.

Image Credit : google

விடாமுயற்சி

    மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் குமர் நடிக்கிறார். இந்த படத்தையும் இந்த ஆண்டு வெளியிட படக்குழு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image Credit : google

தங்கலான்

    பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படம் விக்ரமின் 61வது படமாகும். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்க்கும் இந்த படம், இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit : google