97 வது ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் லிஸ்ட்


Alagar Raj AP
23-09-2024, 15:35 IST
www.herzindagi.com

    2025 ஆம் ஆண்டுக்கான 97 வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் 6 மொழிகளில் இருந்து மொத்தம் 29 திரைப்படங்களை இந்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இவற்றில் ஒரு படம் மட்டுமே ஆஸ்கருக்கு செல்கிறது.

தமிழ்

    மகாராஜா, தங்கலான், வாழை, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜமா ஆகிய 6 தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி

    லாபட்டா லேடீஸ், மைதான், சந்து சாம்பியன், ஆர்டிகிள் 370, ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர், ஸ்ரீகாந்த், சாம் பகதூர், ஜோராம், கில், குட் லக, அனிமல் உள்ளிட்ட 12 படங்கள் இந்தியில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு

    தெலுங்கில் இருந்து கல்கி 2898 கி.பி., மங்களவாரம் மற்றும் ஹனுமான் ஆகிய 3 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மலையாளம்

    ஆடுஜீவிதம், ஆட்டம், உல்லொழுக்கு, ஆல் வி இமேஜின் அஸ் லைட் ஆகிய 4 படங்கள் மலையாளத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மராத்தி

    ஸ்வரகந்தர்வ சுதிர் பாட்கே மற்றும் காரத் கணபதி ஆகிய இரண்டு படங்கள் மராத்தியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லாபட்டா லேடீஸ்

    இவற்றில் சிறந்த அயல்நாட்டு படத்திற்கான கேட்டகிரியில் இந்தியா சார்பாக ஹிந்தியில் இருந்து லாபட்டா லேடீஸ் படம் ஆஸ்காருக்கு அனுப்படுகிறது. பாலின சமத்துவத்தை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.