இந்தியன் 2 படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


Alagar Raj AP
15-07-2024, 15:39 IST
www.herzindagi.com

    ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று பார்ப்போம்.

இயக்குனர் ஷங்கர்

    இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன்

    இந்தியன் 2 படத்தில் 102 வயது இந்தியன் தாத்தாவாக நடித்திருக்கும் கமல்ஹாசன் சுமார் ரூ.150 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சித்தார்த்

    கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்திற்கு பிறகு சித்ரா அரவிந்தன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

    படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் குறைவான நேரம் மட்டுமே வந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு ரூ.2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    மேலும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன் மற்றும் ஆர்.ரத்னவேலு, பட தொகுப்பாளர் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் வழக்கத்தைவிட அதிக சம்பளம் பெற்றுள்ளார்கள் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.