தமிழ் பல அறிவியல் புனைகதை திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அவற்றில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அறிவியல் புனைகதை திரைப்படங்களின் பட்டியல் இதோ.
24
24 மணி நேரம் முன்னாலும் பின்னாலும் போகும் ஒரு டைம் ட்ராவல் கடிகாரத்தை மையமாக வைத்து அறிவியல் புனைகதையாக உருவாகியிருந்த இப்படம் வெகுஜன ரசிகர்களுக்கு எடுபடவில்லை. ஆனால் இப்படி ஒரு படத்தைக் கொண்டாட தவறிவிட்டோம் என்று ரசிகர்கள் தற்போது வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கலையரசி
தமிழ் சினிமாவின் முதல் சயின்ஸ் பிக்சன் மூவி என்றால் அது 1963-இல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான கலையரசி திரைப்படம் தான். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் நம்பியார், இங்கிருந்து ஒரு பெண்மணியை தனது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அதன் பின் நடைபெறுவதுதான் இப்படத்தின் கதை.
எந்திரன்
ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் தமிழ் சினிமாவின் மைல்கல் திரைப்படம் என்றே கூறலாம். ரோபோட் உணர்ச்சிகளை பெற்று பெண் மீது காதல் வயப்படுதால் ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் சங்கர்.
மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் பின்னணியில் டைம் லூப் கதைக்களத்தில் உருவாகி இருந்த மாநாடு திரைப்படம் சிம்பு ரசிகர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு குஷிப்படுத்தி இருந்தது.
தசாவதாரம்
உலகில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு என்னும் பட்டாம்பூச்சி விளைவுக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான தசாவதாரம் கமல்ஹாசனின் சிறந்த படைப்புகளில் ஒன்று.
டிக் டிக் டிக்
ஜெயம் ரவி நடிப்பில் 2018ஆம் வெளியான டிக் டிக் டிக் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படமாகும். தென்னிந்தியா அருகே விழப்போகும் பிரமாண்ட விண்கல்லை ஹீரோ எப்படி அரும்பாடுபட்டு தடுத்தார் என்பதே இப்படத்தின் ஒன் லைன்.
இன்று நேற்று நாளை
2065 இல் இருந்து நிகழ்காலத்துக்கு வரும் டைம்மிஷின் ஹீரோ மற்றும் அவரது நண்பர் கையில் கிடைத்ததும், அதன் பின் நடைபெறும் அட்டகாசங்கள் தான் இன்று நேற்று நாளை.