தமிழ் சினிமா டாப் நடிகர்களின் 50வது படம் வெற்றியா.. தோல்வியா..?


Alagar Raj AP
07-08-2024, 16:39 IST
www.herzindagi.com

எம்ஜிஆர்

    எம்ஜிஆர்-க்கு 50வது படமான ‘நல்லவன் வாழ்வான்' 1961 ஆம் ஆண்டு வெளியானது. சமூக பிரச்சனையை பேசிய இப்படம் தோல்வி படமாக அமைந்தது.

சிவாஜி கணேசன்

    1958 ஆம் ஆண்டு வெளியான சிவாஜியின் 50வது படம் 'சாரங்கதாரா' படம் தோல்வி படமாக அமைந்தது. இப்படத்தை பார்ப்பது நாடகத்தைப் பார்ப்பது போல் இருப்பதாக அந்த காலகட்டத்தில் விமர்சனங்கள் எழுந்தது.

ரஜினிகாந்த்

    ரஜினி ஆரம்ப காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த நிலையில் அவரது 50வது தெலுங்கில் அமைந்தது. என்.டி.ராமராவ் நாயகனாக நடித்த ‘டைகர்’ படத்தில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் ரஜினிக்கு தோல்வி படமாக அமைந்தது.

கமல்ஹாசன்

    இயக்குனர் கே.பாலசந்தருடன் இணைந்த கமலின் 50வது படமான 'மூன்று முடிச்சு' வெற்றி படமாக அமைந்தது. அது மட்டுமின்றி இப்படத்தில் வில்லனாக நடித்த ரஜினிக்கு இப்படம் திருப்புமுனை படமாக அமைந்தது.

விஜய்

    விஜய்யின் 50வது படமான ‘சுறா’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படுதோல்வி படமாக அமைந்தது.

அஜித் குமார்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்திருந்த 50வது படம் ‘மங்காத்தா’ அஜித்தின் திரைப்பயணத்தில் மைல்கல் படமாக அமைந்தது.

விக்ரம்

    ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் தன் உடலை வருத்தி நடித்த 50வது படமான ‘ஐ’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

விஜய் சேதுபதி

    நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த 50வது திரைப்படம் 'மகாராஜா' வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.

தனுஷ்

    தானே இயக்கி நடித்திருந்த தனுஷின் 50வது படமான 'ராயன்' கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.