அக்டோபர் 2024 ராசிபலன்: ஆளப்போகும் ராசிகள் எது? ஆட்டம் காண போகும் ராசிகள் எது?


Alagar Raj AP
27-09-2024, 17:16 IST
www.herzindagi.com

மேஷம்

    மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். புதிய விஷயங்களைத் தொடங்க இது ஒரு நல்ல மாதமாக இருக்கும். ஆனால் இந்த மாதத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

ரிஷபம்

    ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் பணம் தொடர்பான விஷயங்களில் மற்றவைகளின் அறிவுரை கேட்டு செயல்பட்டால் பாதகமான நிலை உண்டாகும். காதல் உறவுகளில் கோபத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

மிதுனம்

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதோடு மரியாதையும் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் அல்லது உங்கள் வீட்டில் கர்ப்பிணிப் பெண் இருந்தால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

    இந்த மாதம் உங்களுக்கு அன்பும், காதலும் நிறைந்த மாதமாக இருக்கும். திருமணம் பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கும். அதே சமயம் அலைச்சல் நிறைந்த மாதமாகவும் இருக்கும்.

சிம்மம்

    இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடப்பில் கிடந்த பணிகள் முடியும். பொறியியல் படித்தவர்களுக்கு இந்த மாதம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து சில சிரமங்கள் ஏற்படும்.

கன்னி

    கன்னி ராசிக்கு அக்டோபர் அமைதியான மாதமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

துலாம்

    இந்த மாதம் உங்களுக்கு பண வரவு இருந்தாலும் அதற்கு இணையாக செலவுகளும் இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும். இந்த மாதம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுபடுத்தினால் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்

    விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் உங்கள் பொறுமையை சோதிக்க கூடியதாக இருக்கும் என்பதால் எந்த காரியத்திலும் அவசரப்படக்கூடாது. குடும்பத்தில் வயதானவர்கள் இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

தனுசு

    ஒருதலையாக இருந்த உங்கள் காதல் இந்த மாதம் வெற்றி பெரும். உங்கள் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாம் நீங்களே செய்து முடிக்க வேண்டும். மற்றவர்களை நம்பினால் ஏமாறும் மாதமாக உங்களுக்கு அமையும்.

மகரம்

    அக்டோபர் மாதம் உங்களுக்கு வெற்றிகரமான மாதமாக இருக்கும். உங்கள் திறமை மூலம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மொத்தத்தில் இந்த மாதத்தில் நீங்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பீர்கள்.

கும்பம்

    அக்டோபர் மாத தொடக்கம் உங்களுக்கு அசௌகரியமாக இருந்தாலும் மாதத்தின் மத்தியில் நிலைமை சீராகும். தொலைதூரம் அழகான இடங்களுக்கு பயணம் செய்வீர்கள். ஆனால் இந்த மாதம் உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

மீனம்

    இந்த மாதம் உங்கள் சுயமரியாதை பாதிக்கும் வகையில் எந்த செயல்களையும் செய்ய கூடாது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளால் பிரச்சனைகள் உருவாகும். உங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.