மது போதையில் உடலுறவு கொள்வது சரியா?தவறா?


S MuthuKrishnan
17-03-2025, 12:56 IST
www.herzindagi.com

    பலர் மது குடித்துவிட்டு தாம்பத்யம் வைத்துக் கொண்டால் முழு திருப்தி கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அது தவறு. மது அருந்தி விட்டு உறவு கொள்ளும்போது நேரம், காலம் கணக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால் திருப்தி அடைந்து விட்டதாக அவர்களே அவர்களை திருப்திபடுத்திக் கொள்கிறார்கள். அவர்களது தாம்பத்ய செயல்பாடு மனைவியை திருப்திபடுத்தாது.

    பெரும்பாலான ஆண்களுக்கு மதுவால் ஏற்படும் பாதிப்புகள் தெரிவதில்லை. ஆல்கஹால் முதலில் மூளையை தாக்குவதால், உடல் உறவு தூண்டல் நாளடைவில் மறைந்து விடும்.

    ஈரல் பாதிக்கப்படுவதால் வீரியமான விந்து அணுக்கள் உற்பத்தி தடைபட்டுவிடும். மேலும், ஒவ்வொரு முறை தாம்பத்யம் செய்யும் போதும் மதுவை அருந்தும் கட்டாயத்துக்கு உடம்பு பழகி விடும். பின்னர் பாலியல் உறவு என்பது தேவையற்றதாகி, மது முதலிடத்தை பிடித்துவிடும்.

பெண்களின் மன நிலை

    குடிப்பழக்கம் உள்ள கணவரிடம் இருந்து மனைவிக்கு முழுமையான பாலியல் இன்பம் கிடைப்பதில்லை.மது உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும்.நாள்கள் செல்லச்செல்ல, நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக, அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்போது, அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே ஏற்படாத அளவுக்கு மாற்றிவிடுகிறது.

    நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. அதனால் அவர்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் இயக்கம் வெகுவாக குறைந்துவிடும்.