உங்கள் உடல்நலம் பற்றி புட்டு புட்டு வைக்கும் பாதங்கள்
Alagar Raj AP
14-04-2025, 13:32 IST
www.herzindagi.com
பாதங்கள்
உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அது ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படும். அப்படி உடலில் சில பிரச்சனைகளில் இருப்பது பாதங்களில் வெளிப்படும். அதன் மூலம் உங்கள் உடல்நலம் பற்றி அறிய முடியும்.
பாத வெடிப்பு
பாத வெடிப்புக்கு மிக முக்கிய காரணம் நீரிழப்பு. உடலில் நீர்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு பாதங்களில் விரிசல் ஏற்படும். இது மட்டுமின்றி தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத போதும் பாத வெடிப்பு ஏற்படும்.
குளிர்ச்சியான பாதங்கள்
உடலில் இரத்த ஓட்ட குறைபாடு இருக்கும் போது பாதங்கள் குளிர்ச்சியாக இருக்கும் அல்லது இரத்த சோகை பாதிப்பாலும் பாதங்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
பாத வீக்கம்
பாதங்களில் நாள்பட்ட வீக்கம் சிறுநீரகப் பிரச்சினைகள், இதயப் பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை குறிக்கலாம்.
பாத அரிப்பு
கால் விரல்களுக்கு இடையில் அரிப்பு, எரிச்சல் தோலழற்சி போன்றவை பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும். அதனால் பாதங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
உணர்வின்மை
பாதங்கள் உணர்வில்லாமல் இருப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாகும். உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது அது பாதங்களில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும். இதன் விளைவாக பாதங்களில் உணர்ச்சி குறையும்.
கால் வலி
நாள்பட்ட கால் வலி கீல்வாதம் பாத்தின் அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் இது போன்று ஏற்படும்.
கால் பிடிப்புகள்
நீரிழப்பு, இரத்த ஓட்டத்தில் பிரச்சனை, நரம்பு பிரச்சனைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற காரணங்களால் கால்களில் அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படும். அதனால் நிறைய தண்ணீர் குடிக்கவும் மற்றும் ஊட்டச்சத்து சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
குணமாகாத காயங்கள்
கால்களில் காயம் ஏற்பட்டால் அது நீண்ட நாட்களுக்கு குணமாகாமல் இருப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த ஓட்டம் குறைபாடு மற்றும் கால்களில் நரம்பு சேதம் காரணமாக காயங்கள் ஆற அதிக நாட்கள் ஆகும்.