சமீபத்தில் உத்தரகாண்ட்டில் நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களின் உடல் பருமன் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெயை அதிகமாக பயன்படுத்துவது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் நோய்கள்
இதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கு சமையல் எண்ணெயை அதிகமாக உட்கொள்வதும் ஒரு காரணமாக இருப்பதாக பிரதமர் கூறினார்.
எண்ணெய் பயன்பாடு
நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் 10% குறைக்க வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமரின் அறிவுரை
சமையல் எண்ணெய் உட்கொள்வதை குறைப்பதுடன் தினமும் உடற்பயிற்சி செய்யவும், ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஆரோக்கியமற்ற உணவு முறை
இந்தியாவில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் 54% ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் ஏற்படுவதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை (NFHS) தரவுகள் வெளிப்படுத்துகிறது.
நகர்ப்புற ஆண்கள்
கிராமப்புறங்களை விட (ஆண்கள் 19.3%) நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுக்கு (ஆண்கள் 29.8%) உடல் பருமன் பாதிப்பு அதிகம் இருப்பதாக NFHS ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது.