Family Rejection: குடும்ப நிராகரிப்பை சமாளிப்பதற்கான வழிகள்


Alagar Raj AP
14-01-2024, 16:00 IST
www.herzindagi.com

குடும்ப நிராகரிப்பு

    குடும்பத்தில் இருந்து ஒருவர் நிராகரிக்கப்படுவது என்பது மிகவும் மோசமானது. அப்படிப்பட்ட நிலையில் குடும்பத்தில் இருந்து நீங்கள் நிகரிக்கப்பட்டால் அதில் இருந்து எப்படி வெளியே வரும் என்பது குறித்து காண்போம்.

உணர்ச்சி

    உணர்வுகளில் மூழ்காமல் இருப்பதை தவிர்க்கவும். சோகமான பாடல்கள், பழைய நியாபகங்களை நினைவூட்டும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்ப்பதால் சோகமாக உணர செய்யும்.

மக்களோடு மக்களாக

    ஒரே இடத்தில் இருப்பதை தவிர்த்து வெளியிடங்களுக்கு சென்று மக்களோடு மக்களாக இருந்தால் குடும்ப நிராகரிப்பு தனிமையில் இருந்து வெளி வர முடியும்.

கடந்து செல்லுதல்

    குடும்பத்தினரின் நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அடுத்த நகர்வுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு கடந்து செல்லும் போது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் அமையும்.

சுய கவனிப்பு

    நடந்ததே நினைத்து கொண்டு இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். இதனால் ஆரோகியமான உணவுகளை சாப்பிட்டு, சரியான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

நீங்கள் நம்பும் ஒருவரிடம் பேசுங்கள்

    இது போன்ற சூழல்களில் உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் உங்கள் உணர்வுகளை பேசுவதால் மன நிம்மதி கிடைக்கும். அவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை அளிக்கும்.

புதிய நண்பர்கள்

    உங்களை புரிந்து கொள்ளும் புதிய நண்பர்களுடன் பழகுவதால் புதிய அனுபவம் கிடைக்கும். பழைய நினைவுகளில் இருந்து வெளிவர நல்ல வாய்ப்பாக அமையும்.