இந்த காய்கறிகளை எக்காரணத்தை கொண்டும் சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டாம்!
Alagar Raj AP
27-03-2024, 18:08 IST
www.herzindagi.com
காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களை அளித்தாலும். ஒரு சில காய்கறிகளை பச்சையாக சமைக்காமல் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். அது என்ன காய்கறிகள் என்று இந்த பதிவில் காண்போம்.
இலை காய்கறிகள்
காலிஃபிளவர், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்றவற்றை பச்சையாக சாப்பிட கூடாது. இந்த காய்கறிகளில் உள்ள சர்க்கரை ஜீரணத்தை கடினமாகி இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
காளான்
பச்சை காளான்களை அல்லது நன்றாக சமைக்காத காளான்களை சாப்பிடுவது உடலில் நச்சு அபாயத்தை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சமைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கிட்னி பீன்ஸ்
கிட்னி பீன்ஸில் அதிக அளவு கிளைக்கோபுரோட்டின் லெக்டின் உள்ளது. இவற்றை பச்சையாகவோ, நன்றாக சமைக்காமல் சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும்.
கத்திரிக்காய்
கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவதால் இதில் உள்ள சோலனைன் என்ற கலவை தலைச்சுற்றல், வாந்தி மற்றும் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்படும்.
பச்சை பீன்ஸ்
பச்சை பீன்ஸில் உள்ள அமினோ அமிலங்கள் நெஞ்சு எரிச்சல், இருமல், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.