குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இது நிச்சயம் உதவும்!
Jansi Malashree V
30-05-2024, 08:20 IST
www.herzindagi.com
ஞாபக சக்தியையும், மூளையின் செயல்திறனையும் அதிகரிக்க வேண்டும் என்றால் தினமும் வல்லாரை கீரை சாப்பிடுவது நல்லது.
மூளை வளர்ச்சி:
வல்லாரை கீரையில் உள்ள இரும்புச்சத்து, உயிர்ச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு குழந்தைகளின் நினைவுத்திறனை மேம்படுத்த உதவியாக உள்ளது.
உடல் சோர்வை நீக்கும்:
வல்லாரையில் இரும்பு, தாதுக்கள், சுண்ணாம்பு சத்து போன்றவை உள்ளதால் நாள் முழுவதும் உடலை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
குடல் புண்களுக்குத் தீர்வு:
அல்சர் எனப்படும் குடல் புண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வல்லாரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, குடல் புண்களும், வாய்ப்புண்களும் ஏற்பட வாய்ப்பில்லை.
இரத்தசோகைக்குத் தீர்வு:
வல்லாரையில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு, அதன் அளவையும் அதிகரிக்கிறது. எனவே அனீமியா பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
இயற்கை நமக்காக தந்துள்ள வரப்பிரசாதம் இந்த வல்லாரை கீரை. இதை வேக வைத்தோ? அல்லது பொடியாக்கி உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.