சிறுநீர் தொற்று ஏற்பட காரணம் என்ன ? அதன் அறிகுறிகள் என்ன?


G Kanimozhi
22-05-2024, 12:38 IST
www.herzindagi.com

சிறுநீரகப் பாதை தொற்று

    இன்றைய காலத்தில் அணைத்து வயதினர் பெண்கள் பலருக்கும் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது பொதுவான பிரச்சனை ஆக மாறிவிட்டது. இது சிறுநீரகப் பாதை தொற்று ஏற்படுவதினால் இருக்கும் அறிகுறிகளாக இருக்கலாம்.

சிறுநீரக நோய் தொற்று ஏற்பட என்ன காரணம்

    சிறுநீரக கற்கள்

      உங்கள் சிறுநீர்ப்பையில் சிறுநீரக கற்கள் இருந்தால் கூட சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம். இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது

    பாலியல் ரீதியாக நோய் தொற்று

      இந்த பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் பொழுது பெண்கள் கருப்பைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    சிறுநீர்ப்பாதை தொற்று

      UTI என்று கூறப்படும் இந்த சிறுநீர் பாதை தொற்று உண்மையில் பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இதனால் இவர்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்வு ஏற்படலாம்.

    மாதவிடாய் காலம்

      பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்திற்கு பிறகு தங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவாக இருந்தால் சிறுநீரகத் தொற்று ஏற்படலாம்

      இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்