உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்க செய்ய வேண்டிய 6 எளிய பழக்கங்கள்


Alagar Raj AP
26-02-2024, 14:53 IST
www.herzindagi.com

    நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசையா. அப்போ இந்த ஐந்து எளிய பழக்கங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

புகைபிடிக்க கூடாது

    புகைப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆதலால் அதிக நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.

மது அருந்த கூடாது

    மது அருந்துவதை நிறுத்துவதால் பெருங்குடல், மார்பகம் மற்றும் உணவுக்குழாய் போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்கள் ஆபத்து குறைகிறது. இதனால் நீண்ட நாள் வாழ முடியும்.

உணவு பழக்கங்கள்

    மோசமான உணவுப் பழக்கம் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தினமும் உடற்பயிற்சி

    தினமும் சிறிய உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் நமது ஆயுட் காலத்தை 4.5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

உடல் எடை பராமரிப்பு

    ஆரோக்கியமான உடல் நிலைக்கு பிஎம்ஐ குறியீட்டெண் 18.5 முதல் 24.9 வரை இருக்க வேண்டும். இதனால் நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் மார்பக புற்றுநோயை சமாளிக்க முடியும்.

அதிக தூக்கம்

    உயிரணு செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் உடலை குணப்படுத்துவதற்கும் தூக்கம் முக்கியமானது. 5 முதல் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது ஆரம்பகால மரமரணத்தை 12 சதவீதம் அதிகரிக்கும்.