சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இதை பின்பற்றுங்க!


Alagar Raj AP
12-06-2024, 12:23 IST
www.herzindagi.com

சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடுகள்

    உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற, உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்த, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிட, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த போன்ற பல்வேறு நன்மைகளை சிறுநீரகம் செய்கிறது.

    நம் உடலின் பல தேவைகளை பூர்த்தி செய்யும் சிறுநீரகம் சேதமடைந்தால் உடல் பல வகைகளில் பாதிப்படையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே இந்த பதிவில் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளை காணலாம்.

நீரேற்றமாக இருங்கள்

    நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருங்கள். இது உங்கள் சிறுநீரகங்கள் நச்சுகளை வெளியேற்றும் முறையை எளிதாக்கும்.

புகை பிடிக்காதீர்கள்

    புகைபிடித்தல் சிறுநீரக நோயின் அபாயத்தை அதிகரிக்கும். உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாக்கவும், உங்கள் நல்வாழ்வை மேம்படுத்தவும் இன்றே புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

உடற்பயிற்சி மற்றும் உணவு முறை

    வழக்கமான உடற்பயிற்சி செய்வது மற்றும் சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கும்.

வலி நிவாரணியை தவிர்க்கவும்

    வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் உட்கொண்டால் சிறுநீரகம் சேதமடையும். எனவே அவற்றை சிக்கனமாகவும், தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்.

சர்க்கரை அளவை கண்காணிக்கவும்

    உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோயிகள் சிறுநீரகத்தை பாதிக்கலாம், எனவே இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை அடிக்கடி கண்காணிக்கவும்.