உங்களுக்கு வயிற்றில் அல்சர் இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் இது!
Alagar Raj AP
02-10-2024, 10:00 IST
www.herzindagi.com
அல்சர் வர காரணங்கள்
பாக்டீரியா தொற்று, காரணமாக உணவுகள், மதுப்பழக்கம், புகைபிடித்தல், சரியாக சாப்பிடாமல் இருப்பது, மன கவலை, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு வாழ்க்கை முறை காரணங்கள் ஒருவருக்கு அல்சர் ஏற்படலாம். அப்படி அல்சர் இருந்தால் என்ன அறிகுறிகள் உடலில் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
வயிற்று வலி
வயிறு காலியாக இருக்கும் போது அல்லது இரவில் மந்தமாக வயிறு வலிக்கிறது என்றால் அது அல்சரின் பொதுவான அறிகுறியாகும்.
ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சல்
உங்களுக்கு ஏப்பம் அல்லது நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏற்பட்டால் அது வயிற்றில் புண் இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
எடை இழப்பு
அடிக்கடி வலி அல்லது அஜீரணக் கோளாறு காரணமாக, வயிற்றில் புண் இருப்பவர்களால் சரியாக சாப்பிட முடியாது. இதன் விளைவாக போதிய உணவு உட்கொள்ளாததால் உடல் எடை குறைய தொடங்கும்.
சாப்பிட்டவுடன் குமட்டல்
வயிற்றில் தொற்று அல்லது புண் இருந்தால் சாப்பிட்டு முடித்த உடனேயே குமட்டல், வாந்தி வரலாம்.
தொண்டை புண்
சாப்பிட்டவுடன் படுப்பதால் செரிமானத்திற்காக வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் மூலம் தொண்டைக்கு வரும். இதனால் தொண்டை அரிக்கப்பட்டு புண் ஏற்படும். அதே நிலையில் வயிற்றில் செரிமானத்திற்கான அமிலம் குறையும் போது வயிற்றின் பாதுகாப்பு அமைப்பு சேதமடைந்து அல்சர் உண்டாகும்.
இருண்ட நிறத்தில் மலம்
இருண்ட நிறத்தில் மலம் வருவது வயிற்றில் அல்சர் மோசமான நிலையில் உள்ளதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும். வயிற்று புண்களில் இரத்தம் கசிவதால் இருண்ட நிறத்தில் மலம் வெளியேறும்.