ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறை
Alagar Raj AP
02-01-2025, 13:07 IST
www.herzindagi.com
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காய்ச்சல் எப்படி பரவுகிறது மற்றும் அதன் தடுப்பு முறைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
ஸ்க்ரப் டைபஸ்
ஸ்க்ரப் டைபஸ் எனப்படுவது ஒரு வகையான பாக்டீரியா ஆகும். ஓரியன்டியா சுட்சுகாமுஷி எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியாவால் பாதித்த ஒட்டுண்ணிகள் மனிதர்களை கடிக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் போன்றவை ஸ்க்ரப் டைபஸ் தொற்றின் முக்கிய அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளன.
யாரை பாதிக்கும்?
புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் போன்ற பூச்சிகள் அதிகம் நிறைந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மருத்துவ பரிசோதனை
தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் எலிஸா ரத்தப் பரிசோதனை மற்றும் ஐஜிஎம் ஆன்ட்டிபாடி பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறியலாம்.
சிகிச்சை
ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்ஸிசைக்ளின் மற்றும் அசித்ரோமைசின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீவிர பாதிப்பு
பயாடிக் மருந்துகளால் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம்.