இடது பக்கம் தூங்குவதன் நன்மைகள்


S MuthuKrishnan
18-06-2025, 11:54 IST
www.herzindagi.com

இதய ஆரோக்கியம்

    இடது பக்கமாக தூங்குவது இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது இதயத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதய பிரச்சினைகளில் இருந்து விலகி இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

கல்லீரல்

    இடது பக்கமாக தூங்குவது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

செரிமானம்

    இடது பக்கமாக தூங்குவது அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகளை குறைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

கர்ப்பிணி பெண்கள்

    கர்ப்பிணி பெண்கள் இடது பக்கமாக தூங்குவது நன்மை பயக்கும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

முதுகெலும்பு

    இடது பக்கம் சாய்ந்து தூங்குவது உங்கள் முதுகுத்தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தாது. மேலும் நீங்கள் வசதியாகவும் நிம்மதியாகவும் தூங்கலாம்.

நல்ல தூக்கம்

    இடது பக்கமாக தூங்குவது முதுகு வலியை குறைக்கிறது. சுவாசத்தை மேம்படுத்துகிறது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

நுரையீரல் ஆரோக்கியம்

    இடது பக்கமாக தூங்குவது ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை குறைக்கிறது. மேலும் மன அழுத்தத்தை குறைத்து சுவாச பிரச்சனைகளையும் குறைக்கிறது

பித்தப்பை

    இடது பக்கமாக தூங்குவது பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

மலச்சிக்கல்

    இடது பக்கமாக தூங்குவது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்கும்