சூடான உணவை சாப்பிட்டு நாக்கு எரிகிறதா? இந்த சிம்பிள் வைத்தியங்கள் உங்களுக்கு உதவும்
Alagar Raj AP
26-07-2024, 12:00 IST
www.herzindagi.com
சூடான உணவுகளை தெரியாமல் சாப்பிட்ட பிறகு நாக்கு வெந்து பயங்கரமாக எரிந்து சிவந்துவிடும். இப்படி ஆனால் இந்த பதிவில் உள்ள சிம்பிளான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லுடன் ஐஸை கலந்து நாக்கில் தடவினால் எரியும் உணர்வு குறையும்.
பேக்கிங் சோடா
சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கரைத்து வாயில் வைத்தால் நாக்கு எரிச்சல் தணியும்.
தயிர்
ஒரு ஸ்பூன் தயிரை வாயில் வைத்தால் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை
நாக்கில் எரிச்சல் குறையும் வரை சிறிது சர்க்கரையை வாயில் வைக்கவும்.
தேன்
தேனை நாக்கில் வைத்தால் எரியும் உணர்வு குறைந்து சிறிது நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
திரவங்கள்
நாக்கு எரிந்தால் குளிர்ச்சியான நீர் அல்லது குளிர்பானம் ஆகியவற்றை குடியுங்கள். இதனால் நாக்கு எரிச்சல் தணியும்.