மாறிவரும் பருவநிலையால் அடிக்கடி சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ளலாம். இன்றைய பதிவில் வறட்டு இருமலுக்கான வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Image Credit : freepik
தேன்
இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் எரிச்சலை குறைக்கின்றன. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் தேன் கலந்து குடிப்பது இருமல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் தரும்.
Image Credit : freepik
மஞ்சள்
இதில் உள்ள குர்க்குமின் எனும் வேதிப்பொருள் இருமலை குணப்படுத்த உதவுகிறது. வரட்டு இருமலை போக்க பாலுடன் சிறிதளவு மஞ்சள் பொடி, மிளகு பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
Image Credit : freepik
வாய் கொப்பளிக்கலாம்
வறட்டு இருமலால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை போக்க உப்பு தண்ணீரால் வாய் கொப்பளிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலியும் குணமாகும்.
Image Credit : freepik
வெதுவெதுப்பான பானங்கள்
வெந்நீர், சூப், மூலிகை டீ போன்ற சூடான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இது எரிச்சலைப் போக்கி தொண்டைக்கு இதமான உணர்வை கொடுக்கும்.
Image Credit : freepik
இஞ்சி
இஞ்சியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியை குறைக்க உதவுகின்றன. இந்த வீட்டு வைத்தியங்கள் இருமலுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும். இருப்பினும் இருமல் மோசமாவதை தடுக்க மருத்துவரின் ஆலோசனையையும் பெறவும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தக் கருத்துக்கள் யாவும் பொதுவானவையே. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.