உங்கள் நிணநீர் மண்டலம் சரியாகச் செயல்படாததன் அறிகுறிகள்


Alagar Raj AP
11-03-2025, 12:51 IST
www.herzindagi.com

நிணநீர் மண்டலம்

    நிணநீர் மண்டலம் என்பது உடல் முழுவதும் அமைந்துள்ள மென்மையான குழாய்களின் வலையமைப்பாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் உடலில் இருந்து கழிவுகள், நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான திரவத்தை அகற்ற நிணநீர் மண்டலம் உதவுகிறது. இது நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அறிகுறிகள்

    நிணநீர் மண்டலம் சரியாக வேலை செய்யாத போது, ​​உடலில் கழிவுகள் குவிவதற்கும் நோயெதிர்ப்பு செயல்பாடு குறைவதற்கும் வழிவகுக்கும். இதனால் உடலில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

வீக்கம்

    நிணநீர் மண்டலம் சரியாக செயல்படாத போது உடலில் திரவம் குவியும். இதன் விளைவாக கைகள், கால்கள், முகம் உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படும்.

சைனஸ் பிரச்சனை

    உடலில் திரவம் தேங்கும் போது சைனஸ் பிரச்சனை ஏற்படக்கூடும். இதன் விளைவாக மூக்கடைப்பு மற்றும் சளி பிரச்சனைகள் ஏற்படலாம்.

சோர்வு

    நிணநீர் மண்டலம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் உடலில் கழிவுகள் தொங்கத் தொடங்கும். இதனால் அதிகப்படியான சோர்வுக்கு காரணமாக அமையும்.

சரும பிரச்சனைகள்

    உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதன் அறிகுறிகள் சருமத்தில் வெளிப்படும். இதன் விளைவாக தோலின் நிறம் மங்குதல், முகப்பரு, சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும்.

குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்

    நிணநீர் ஓட்டம் பாதிக்கப்படும் போது உடலில் திரவத்தின் சுழற்சி குறையும். இதனால் கை, கால்கள் குளிர்ச்சியாகி மரத்துப் போவோ வழிவகுக்கும்.

நோய்வாய்ப்படுதல்

    நிணநீர் மண்டலம் சரியாக வேலை செய்யாத போது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனப்படும். இதனால் அடிக்கடி நோயால் பாதிக்கப்படக்கூடும்.