உடலில் கிரியேட்டினின் அளவு அதிகரித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
Alagar Raj AP
18-03-2025, 13:31 IST
www.herzindagi.com
கிரியேட்டினின்
கிரியேட்டினின் என்பது நமது தசைகளால் உற்பத்தி செய்யப்படும் கழிவுப் பொருட்கள் ஆகும். இரத்தத்தில் காணப்படும் கிரியேட்டினினை சிறுநீர் வழியாக சிறுநீரகங்கள் வெளியேற்றுகிறது. ஆனால் கிரியேட்டினின் வெளியேறாமல் உடலில் தேங்கினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
வீக்கம்
பல காரணங்களுக்காக பாதங்களில் வீக்கம் ஏற்படும். அவற்றில் ஒன்று சிறுநீரகங்களில் கிரியேட்டினின் நச்சு பொருள் அதிகரிக்கும் போது பாதங்களில் வீக்கம் ஏற்படுவது.
உடல் அரிப்பு
இரத்தத்தில் கழிவு பொருட்கள் குவிவதால் தோல் வறண்டு சேதமடைய தொடங்கும். இதனால் உடல் முழுவதும் தடிப்புகள் மற்றும் அரிப்புகள் ஏற்படக்கூடும்.
சிறுநீரக பிரச்சனை
சிறுநீரகங்களில் கிரியேட்டினின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் உண்டாகும்.
சோர்வு
இரத்தத்தில் கழிவுகள் குவியும் போது இதயம் துடிப்பது கடினமாகும். இதன் விளைவாக நுரையீரல் அதிக அழுத்தத்துக்கு ஆளாகி மூச்சு விடுவது கடினமாகும்.
பசியின்மை
உடலில் கிரியேட்டினின் அளவு அதிகரித்துள்ளது என்பதற்கான மற்றொரு அறிகுறி பசியின்மை. இரத்தத்தில் நச்சுக்கள் குவியும் போது சுவை உணர்வு மற்றும் ஜீரண சக்தி குறையும். இது பசியின்மைக்கு வழிவகுக்கும்.
சிறுநீர் பாதை தொற்று
சிறுநீரகங்களில் நச்சுக்கள் குவிவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், சில நேரங்களில் சிறுநீர் சரியாக வெளியேறாது.