மற்றவர்களை விட உங்களை மட்டும் கொசுக்கள் அதிகம் கடிக்க இது தான் காரணம்
Alagar Raj AP
24-06-2024, 12:07 IST
www.herzindagi.com
நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கலாம் ஏன் மற்றவர்களை விட நம்மை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கிறது என்று. உங்கள் சந்தேகத்திற்கான பதிலை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
இரத்த வகை
கொசுக்கள் முட்டைகளை உருவாக்க சரியான இரத்தம் அவசியம். அதற்கு O வகை இரத்தம் விருப்பம் உள்ளதாக இருக்கிறது. அதனால் தான் மற்ற இரத்த வகைகளை விட O வகை இரத்தம் உள்ளவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கிறது.
வியர்வை நாற்றம்
உடலில் வியர்க்கும் போது சருமத்தில் இருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், அமோனியா போன்றவை கொசுக்களை அதிகம் ஈர்க்கும்.
உடல் சூடு
அதிகம் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடலில் இருந்து சூடு வெளிப்படும். இது கொசுக்களை அதிகம் ஈர்க்க வாய்ப்புள்ளது.
கார்பன் டை ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயுவை கொசுக்களால் 50 மீட்டர் தொலைவில் இருந்து கூட உணர முடியும் என்பதால் கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றுபவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கிறது. குறிப்பாக கர்ப்பிணிகள், பெரியவர்களுக்கு கரியமில வாயு அதிகமாக வெளியேறும்.
ஆடை நிறம்
சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு போன்ற அடர் நிற ஆடைகள் கொசுக்களுக்கு கவர்ச்சியாக இருக்கும். இந்த நிறங்களில் ஆடைகளை அணிவதால் கொசுக்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.
மது அருந்துதல்
மது அருந்திய பிறகு உடல் வெப்பநிலை அதிகரிக்கும், வியர்வை அதிகம் வெளியேறும். இந்த இரண்டு காரணங்களும் கொசுக்களை அதிகம் கவர்ந்திழுக்கும்.