40 வயதிற்குள் இதய நோய்க்கு ஆளாகலாம் இருக்க இந்த பழக்கங்களை இன்றே விட்டு விடுங்கள்
Alagar Raj AP
07-10-2024, 17:51 IST
www.herzindagi.com
20 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்களின் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக முதியவர்களுக்கு வரும் இதய பிரச்சனைகள் சிறு வயதிலேயே ஏற்படுகிறது. இப்படி உங்களுக்கு ஏற்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்.
சர்க்கரை உணவுகள்
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதால் வகை 2 நீரிழிவு ஏற்படும். இதன் விளைவாக இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை உணவுகளை குறைத்துக்கொள்ளவும்.
புகைபிடித்தல்
புகைப்பிடிப்பதால் நுரையீரலுக்கு மட்டும் பாதிப்பு கிடையாது இதயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்களில் கட்டிகள் உருவாகும், இதனால் இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புகைபிடிப்பதை இன்றே நிறுத்துங்கள்.
அதிக உப்பு உணவுகள்
அதிகம் உப்பு சேர்த்த உணவுகளை உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரும். இதன் விளைவாக இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான வாய்ப்பு அதிகம். எனவே உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும்.
தூங்காமல் இருப்பது
இரவில் தூங்கும் போது இரத்த அழுத்தம் குறையும். ஆனால் தூங்காமல் இருக்கும் போது இரத்த அழுத்தம் உயரும், இதனால் இதயம் செயல்படுவது கடினமாகும். இதன் விளைவாக இதய நோய் ஏற்பாடும் என்பதால் இரவில் நன்றாக தூங்கவும்.
காலை உணவை தவிர்ப்பது
காலை உணவை தவிர்ப்பதால் அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே காலை உணவை தவிர்க்க வேண்டாம்.
அதிக நேரம் உட்கார்ந்திருப்பது
அதிகம் நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. எனவே ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 10 நிமிடம் எழுந்து நடக்கவும்.