தினமும் தண்ணீரை இப்படி குடிங்க.. வாழ்நாள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்!
Jansi Malashree V
20-07-2024, 21:30 IST
www.herzindagi.com
உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க எப்படியெல்லாம் தண்ணீரைக் குடிக்க வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
நீரேற்றம்:
உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவுக்கு முன்பாக பருகுதல்:
தேவையில்லாத உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகளைச் சரி செய்வதற்கு, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலையில் 2 டம்ளர்:
நாள் முழுவதும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், காலையில் 2 டம்ளர் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்.
இதய பிரச்சனை:
இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், தூங்குவதற்கு முன்னதாக ஒரு டம்பளர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
இதோடு மட்டுமின்றி உடலை எப்போதும் ஆரோக்கியத்துடனும் 90 சதவீத நோய் தாக்குதலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.