தலை சுற்றும் பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்க!


G Kanimozhi
26-02-2025, 16:46 IST
www.herzindagi.com

தலைவலி, தலைசுற்றல், மைக்ரேன் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியம்

    தலைசுற்றல் ஏற்பட காரணங்கள்

      குறைந்த இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய பதற்றம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளும் தலை சுற்றலை உண்டாக்கும்.

    தலைசுற்றலை குணமாக்க வீட்டு வைத்தியம்

      7 அல்லது 8 பாதாம் பருப்பு எடுத்து அவற்றை 7 அல்லது 8 பரங்கி விதைகளுடன் சேர்த்து, அதோடு ஒரு ஸ்பூன் கசகசா, மூன்று டேபிள் ஸ்பூன் கோதுமை இவற்றுடன் கலந்து தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

    ஸ்டெப் 2

      காலையில் பாதாம் பருப்புகளின் தோலை நீக்கி, எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து நன்றாக கூழாக அரைத்துக் கொள்ளவும்.

    ஸ்டெப் 3

      தனியாக 2 டேபிள் ஸ்பூன் நெய்யில் 1/2 டேபிள் ஸ்பூன் கிராம்பை போட்டு வறுக்கவும். இதனுடன் அரைத்து வாய்த்த பாதாம் கூழை சேர்த்து சிறிது பால் விட்டு காய்ச்சவும்.

    ஸ்டெப் 4

      இந்த கலவையை தேவையான அளவு சர்க்கரை சேர்த்து தினசரி சில நாட்களுக்கு குடித்து வந்தால் நாளடைவில் தலை சுற்றல் பிரச்சனை குணமாகும்.

      இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்