நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க இதை செய்யுங்க!


Raja Balaji
10-03-2024, 17:09 IST
www.herzindagi.com

    நீங்கள் காலையில் எப்படி எழுந்திருக்கிறீர்கள் என்பது அன்றைய நாளின் முழு மனநிலையையும் தீர்மானிக்கிறது. எனவே மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் எழுந்திருக்க காலையில் சில விஷயங்களைப் பழக்கப்படுத்தி கொள்வது நல்லது.

நல்ல தூக்கம்

    சீக்கிரம் படுக்கைக்கு சென்று சீக்கிரம் எழுந்திருப்பது ஒரு மனிதனை ஆரோக்கியமாகவும், செல்வந்தனாகவும் மாற்றும். காலையில் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் எழுந்திருக்க ஒன்பது மணிநேர தூக்கம் முக்கியமானது.

சுத்தமான படுக்கை

    காலையில் எழுந்தவுடன் அவசர அவரமாக கிளம்ப வேண்டாம். தூங்கி எழுந்த படுக்கையை சுத்தப்படுத்துங்கள். காபி அல்லது தேநீர் அருந்துங்கள்.

தியானம்

    காலையில் தியானம் செய்வது உங்களைக் கவனமாக இருக்க உதவுகிறது. தியானம் செய்வது உங்களை அமைதிப்படுத்தும் மற்றும் நீண்ட காலத்திற்கு உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

அலாரம்

    உரிய நேரத்திற்கு எழுந்திருக்க அலாரம் பயன்படுத்தவும். ஆனால் அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் தூங்குவது தவறு.

நீரேற்றம்

    எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். சத்தான ஜூஸ்களை குடித்து நாள் முழுவதும் நீரேற்றமாக இருங்கள். நீரேற்றம் மன மற்றும் உடல் நலத்திற்கு முக்கியமாகும்.

காலை உணவு

    ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள். முடிந்தவரை காலை உணவை நீங்களே தயார் செய்யுங்கள்.

உடற்பயிற்சி

    வழக்கமான 10 நிமிட நடைபயிற்சி அல்லது இதர உடற்பயிற்சி, யோகா உங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.