ஒவ்வொரு நபரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மருத்துவ எண்கள்
Alagar Raj AP
04-01-2025, 08:39 IST
www.herzindagi.com
இதய துடிப்பு
பெரியவர்களுக்கு சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 60 மற்றும் 100 முறை இதயம் துடிக்க வேண்டும்.
வெப்பநிலை
மனித உடல் 36.8 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருப்பது இயல்பானது.
சுவாசம்
பெரியவர்கள் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 16 முறை சுவாசிப்பது சாதாரணமானது.
இரத்த அழுத்தம்
பெரியவர்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 120 க்கும் குறைவாகவும், டயஸ்டாலிக் அழுத்தம் 80 க்கும் குறைவாகவும் இருக்கும் இருப்பது இயல்பானது. அதாவது இரத்த அழுத்தம் சாதாரணமாக 12/80 இருக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dL க்கு குறைவாக இருந்தால், கொலஸ்ட்ரால் இயல்பான நிலையில் உள்ளதாகும்.
ஹீமோகுளோபின்
ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14.0 முதல் 17.5 gm/dl வரையும், பெண்களுக்கு 12.3 முதல் 15.3 gm/dl வரையும் இருப்பது சாதாரணமான அளவு.
வெள்ளை இரத்த அணுக்கள்
இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் ஒரு மைக்ரோ லிட்டருக்கு 4,500 முதல் 11,000 வரை இருப்பது ஆரோக்கியமான வரம்பு.
குறிப்பு
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் யாவும் பாலினம், வயது, உடல்நிலை, உடல் அமைப்பு, வாழ்க்கை நிலை போன்றவற்றை பொறுத்து வேறுபடும்.