கூனைப்பூ: இந்த மலராத பூவில் ஒளிந்திருக்கும் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்!
Alagar Raj AP
27-02-2024, 17:00 IST
www.herzindagi.com
கூனைப்பூக்கள்
கூனைப்பூக்கள் 2,000 ஆண்டுகளாக கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் சமையல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆங்கில பெயர் ஆர்ட்டிசோக்ஸ். கூனைப்பூவில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக சாலட்கள் முதல் இனிப்புகள் வரை இவை பயன்படுத்தப்படுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
கூனைப்பூவை அரைத்து சாறு போல் குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன.
கல்லீரல் ஆரோக்கியம்
மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு கல்லீரல் செயல்பாட்டை கூனைப்பூ மேம்படுத்தும்.
ரத்த அழுத்தம் குறையும்
கூனைப்பூக்களில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது
கூனைப்பூவில் அதிகம் உள்ள பாலிபினால்கள் எனப்படும் ஒரு வகை ஆக்ஸிஜனேற்ற கலவை புற்றுநோயை உண்டாகும் செல்களை எதிர்த்து போராடுகிறது.
நல்ல தூக்கத்தை அளிக்கும்
ஒரு பெரிய கூனைப்பூவில் 100 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியம் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கூனைப்பூக்களில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் என்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.