அரிசி சாப்பிடும் பழக்கம் ஆபத்தானதா?


Shobana Vigneshwar
02-03-2023, 22:32 IST
www.herzindagi.com

அரிசி

    ஒரு சிலருக்கு அரிசியை சமைக்காமல் அப்படியே பச்சையாக அள்ளி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது ஆபத்தானதே! அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

Image Credit : freepik

குடலை சேதப்படுத்தும்

    அரிசியில் உள்ள லெக்டின் கடினமானது மற்றும் உடலால் ஜீரணிக்க முடியாது. இவை கரையாமல் வயிற்றின் உள் குடல் சுவர்களை சேதப்படுத்துகின்றன.

Image Credit : freepik

பெண்களை பாதிக்கும்

    அதிகமாக அரிசி சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இதனால் நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Image Credit : freepik

உடல் நல பிரச்சனைகள்

    பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களே அரிசியை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் மஞ்சள் நிற சருமம், வலுவிழந்த நகம் மற்றும் முடி, வயிற்று வலி போன்ற பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படலாம்.

Image Credit : freepik

ஃபுட் பாய்சன்

    பொதுவாக சமைக்கப்படாத அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா உள்ளது. இவை சமைக்கும் போது அழிந்து விடுகின்றன, ஆனால் பச்சையாக சாப்பிடும் போது ஃபுட் பாய்சன் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.

Image Credit : freepik

வாயுத்தொல்லை

    பச்சை அரிசியை சாப்பிடுவதால் வயிற்றில் வாயுத்தொல்லை அதிகரிக்கும். இதனால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் ஏற்படலாம்.

Image Credit : freepik

வயிற்றுப்போக்கு

    அரிசி சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அரிசியில் உள்ள லெக்டின் என்ற புரதம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik