வயிறு உப்புசம் பிரச்சனையை குணப்படுத்த வீட்டு வைத்தியங்கள்!
Alagar Raj AP
06-06-2024, 17:22 IST
www.herzindagi.com
வயிறு உப்புசம்
நாம் சாப்பிடும் சில உணவுகள் வயிறு உப்புசத்திற்கு காரணமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல், வாயு போன்றவை ஏற்பட்டு வயிறு வீங்கியிருப்பது போல் அல்லது இறுக்கமாக இருப்பது போல் உணர்வீர்கள். இதை தடுக்க சில வீட்டு வைத்தியங்களை காண்போம்.
இஞ்சி
இஞ்சியை துண்டுகளாக நறுக்கி 5-10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். இஞ்சி வீக்கத்தை குறைத்து செரிமானத்தைத் தூண்டி வயிறு உப்புசத்தை குறைக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து உணவுக்கு முன் குடித்தால் வயிற்று அமிலம் அதிகரித்து செரிமானம் சீராகும்.
அடிவயிற்று மசாஜ்
உங்கள் அடிவயிற்றில் எண்ணெய் தேய்த்து கடிகார திசையில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இதனால் வயிற்றில் தேங்கியுள்ள வாயுவை வெளியேறும்.
புதினா டீ
புதினா இலைகளை ஒரு கிளாஸ் நீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து குடித்தால் குடல் தசைகள் தளர்ந்து வாயு வெளியேறும்.
ஓமம் வாட்டர்
1 டீஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் நீரில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கவும். ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகளுக்கு பெயர் பெற்ற ஓமம் செரிமான மண்டலத்தை எளிதாகி மலச்சிக்கலை தீர்த்து வயிறு உப்புசத்தை குறைக்கும்.
பெருஞ்சீரகம்
உணவுக்குப் பிறகு 1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டால் வாயுவை குறைக்க உதவும்.