நீர்க்கடுப்பை சட்டென்று சரிசெய்ய எளிய வீட்டு வைத்தியம்
S MuthuKrishnan
04-04-2025, 12:06 IST
www.herzindagi.com
கோடையில் சிறுநீர் கழித்த பிறகும், உடலுறவுக்குப் பிறகும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததும், சுகாதாரத்தில் போதுமான கவனம் செலுத்தாததும் நீர்க்கடுப்பை ஏற்படுத்தும்.
பார்லி அரிசி தண்ணீர்
பார்லி அரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதற்கு 10 மடங்கு அளவு நீர் விட்டு கொதிக்க விடவேண்டும். குக்கரிலும் 5 முதல் 6 விசில் வரை விட்டு இறக்கி அந்த நீரை மேலாக்க எடுத்து குடித்தால் சிறுநீர் கடுப்பு உடனே குறையும். தினமும் இரண்டு முறை எடுக்கலாம்.
பானகம்
சிறிய அளவு புளியை 6 மடங்கு அளவு கருப்பட்டியை சேர்க்க வேண்டும். கருப்பட்டியை நன்றாக பொடித்து வைக்கவும். புளியை கரைத்து அரை தம்ளர் அளவு எடுத்து அதில் கட்டியில்லாத கருப்பட்டி பொடியை சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். கருப்பட்டி இல்லாதவர்கள் பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாம்.
உளுந்து ஊறவைத்த நீர்
இரண்டு டீஸ்பூன் அளவு தோல் உளுந்தை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும். பிறகு மறுநாள் காலை பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் இந்த நீரைமட்டும் குடிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவந்தாலே சிறுநீர் எரிச்சல் இருக்காது.
கற்கண்டு
வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் சீரகப்பொடியையும் இரண்டு டீஸ்பூன் கற்கண்டை பொடிய்ம் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். தினமும் மூன்று வேளை இதை குடிக்கலாம்.
இளநீர் வெந்தயம்
இளநீரை வாங்கி வெட்டி அதில் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயத்தை சேர்த்து அப்படியே மூடி வைக்கவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து இளநீரை குடித்தால் உடல் உஷ்ணம் முழுவதும் குறைந்து அப்படியே குளிச்சியாக்கும்.