உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்க கூடிய மூலிகைகள்


Alagar Raj AP
07-01-2024, 10:00 IST
www.herzindagi.com

    உங்கள் உணவை ஆரோகியமான மாற்றும் இந்த மூலிகைகளை உங்கள் வீட்டு தோட்டத்திலேயே வளர்க்கலாம். மேலும் இந்த மூலிகைகள் உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும்.

துளசி

    துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் முகப்பருவை குறைக்க உதவும். மேலும் நரம்பு சார்ந்த பாதிப்புகளில் இருந்து விடுபெற உதவுகிறது.

கொத்தமல்லி

    நாம் சமைக்கும் உணவில் கொத்தமல்லியை சேர்ப்பது உணவின் சுவையை அதிகரிக்கும். நம் உடலில் உள்ள பாதரசம் மற்றும் ஈயம் போன்ற உலோக நச்சுகளை நீக்கும்.

எலுமிச்சை புல்

    எலுமிச்சை புல் கண் வீக்கத்தை குறைக்கும். புற்றுநோயை எதிர்த்து போராடும். எலுமிச்சை புல்லில் வலுவான எலுமிச்சை வாசனை இருப்பதால் உணவில் பயன்படுத்துவதால் நறுமணத்தை அதிகரிக்கும். தேநீரில் சேர்த்தால் கூடுதல் புத்துணர்ச்சியளிக்கும்.

மிளகுக்கீரை

    தலைவலி மற்றும் உடல் வலியை மிளகுக்கீரை தீர்க்கும். மேலும் மாதவிடாய் பிடிப்பில் இருந்து நிவாரணம் தரும். சைனஸ் நெரிசலை போக்க மிளகுக்கீரை உதவியாக இருக்கும்.

ரோஸ்மேரி

    ரோஸ்மேரியை தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது. முடி உதிர்வதை தடுத்து முடி பளபளப்பாக வளர செய்கிறது.

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கு பகிரவும். மேலும் இது போன்ற ஆரோகிய தகவலுக்கு ஹெர் ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.