ஊறவைத்த கருப்பு கொண்டை கடலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்


Abinaya Narayanan
20-09-2024, 12:14 IST
www.herzindagi.com

எடை குறையும்

    தினமும் காலையில் ஊறவைத்த கருப்பு கொண்டைக் கடலை சாப்பிடுவது உடல் எடையை விரைவாகக் குறைக்கிறது. இதை காலையில் சாப்பிடுவதால் ஒருவருக்கு நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாது. அதிகமாக சாப்பிடும் நன்மையை குறைக்கும்.

Image Credit : freepik

செரிமானத்திற்கு உதவுகிறது

    கருப்பு கொண்டைக்கடலையில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் வராமல் உதவுகிறது.

Image Credit : freepik

கண்களுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

    தினமும் காலையில் கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் கண்பார்வை ஆரோக்கியமாக இருக்கும்.

Image Credit : freepik

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பருவகால நோய்கள் தடுக்கலாம்.

Image Credit : freepik

உடல் பலத்தை அதிகரிக்கும்

    கருப்பு கொண்டைக்கடலை புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறுவதுடன், வலிமையும் அதிகரிக்கும்.

Image Credit : freepik

இதயத்திற்கு நன்மை பயக்கும்

    கருப்பு கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

Image Credit : freepik

கொண்டைக்கடலை சாப்பிடும் முறை

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெல்லத்துடன் சாப்பிடலாம் அல்லது சாட் செய்து சாப்பிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அதன் பலன்களை விரைவில் பெறுவீர்கள்.

Image Credit : freepik

குறிப்பு

    உடல் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இந்தக் கலவையை உட்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற தகவல்களுக்கு Her zindagi.com ஐ கிளிக் செய்யவும்.

Image Credit : freepik