கோதுமை ரவையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்


Sanmathi Arun
06-03-2023, 20:20 IST
www.herzindagi.com

கோதுமை ரவை நன்மைகள்

    கோதுமை ரவையை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு காணலாம்

Image Credit : freepik

உடல் எடையை குறைக்க உதவுகிறது

    தினமும் ஒரு கப் கோதுமை ரவை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உங்களை நீண்ட நேரம் திருப்தியடையச் செய்து எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் கலோரிகளும் குறைவு.

Image Credit : freepik

மலச்சிக்கலை போக்குகிறது

    கோதுமை ரவை குடல்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. சிறந்த முடிவுகளுக்கு பால் அல்லது காய்கறிகளுடன் தினமும் உட்கொள்ள வேண்டும்.

Image Credit : freepik

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

    கிளைசெமிக் குறியீட்டில் குறைவாக உள்ளது. இது இரத்தத்தில் குளுக்கோஸின் நிலையான வெளியீட்டை உறுதி செய்கிறது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

Image Credit : freepik

கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கிறது

    அதிக நார்ச்சத்து இருப்பதால், இது உடலின் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியமானது.

Image Credit : freepik

மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது

    சில ஆராய்ச்சிகளின்படி, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கோதுமை ரவை பரிந்துரைக்க படுகிறது. ஏனெனில் இது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

Image Credit : freepik

வளரும் குழந்தைகளுக்கு நல்லது

    கோதுமை ரவை பி-வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றின் இயற்கையான மூலமாகும், எனவே இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாகும்.

Image Credit : freepik

கூடுதல் நன்மைகள்

    உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக உட்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இருக்கும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik