சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை ஒரே தீர்வு கருப்பு திராட்சை மட்டும்!


Alagar Raj AP
12-02-2024, 12:00 IST
www.herzindagi.com

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

    சர்க்கரை நோய் இருப்பவர்கள் கருப்பு திராட்சை சாப்பிட்டால் உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

    கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

உடல் எடை குறைப்பு

    கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து பசி எடுப்பதை தடுக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

    கருப்பு திராட்சையில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீர் செய்வதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

கண் ஆரோக்கியம்

    இதில் உள்ள முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பாதிப்பு அடைவதை தடுக்கிறது.

முதிர்வை குறைக்கும்

    கருப்பு திராட்சை பழம் சாப்பிடுவதால் வயது முதிர்வை குறைத்து என்றும் இளமையாக இருக்க முடியும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களில் ஏற்படும் சேதங்களை தவிர்த்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

இதய ஆரோக்கியம்

    கருப்பு திராட்சை இதய ஆரோக்கியத்தை ஊக்கமளிக்கும். இதில் உள்ள உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ரெஸ்வெராட்ரால் போன்றவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய அமைப்பை பாதுகாப்பாக வைத்திருக்கும்.