புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க இந்த 8 பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்!


S MuthuKrishnan
30-08-2024, 19:22 IST
www.herzindagi.com

இளஞ்சூடான நீர்

    காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும் புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரி செய்யும்.

Image Credit : google

வேந்தயம்/சீரக நீர்

    வெந்தயம் அல்லது சீரகம் ஊறவைத்து வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக் கோளாறுகளை நீக்கி, குளிர்ச்சியைத் தரும்.

Image Credit : google

தேன்

    இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி, இருமலுக்கு நல்ல மருந்து ரத்தத்தை சுத்தம் செய்யும் . உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். செரிமானத்துக்கு உதவும். வயிறு எரிச்சல், உடல் எடையைக் குறைக்கும்.

Image Credit : google

காய்கறிகள்

    கேரட் முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், உடல் எடையைக் குறைக்க உதவும்.

Image Credit : google

பழங்கள்

    வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

Image Credit : google

அரிசிக்கஞ்சி

    உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். வயிறு குடல்புண்களை ஆற்றும், கொலஸ்டரால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும் அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

Image Credit : google

உளுந்தங்களி

    100 கிராம் பச்சரிசி மாவுக்கு 25 கிராம் உளுந்து மாவு என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாக கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

Image Credit : google

முளைக்கட்டிய பயறு

    நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

Image Credit : google