முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!


G Kanimozhi
21-05-2024, 11:26 IST
www.herzindagi.com

    நம் முகத்தில் அதிக கொழுப்பு இருந்தால், அது நம் முகத்தை வீங்கியதாகவும், நமது கழுத்து பெரிதாகவும் தோற்றமளிக்க செய்யும். இது நமது முகத்தில் உள்ள தாடையை அழகாகவும், நல்ல வடிவமாகவும் இல்லாமல் செய்கிறது.

    முகத்தில் உள்ள கொழுப்பை இயற்கை முறையில் குறைக்க சில டிப்ஸ் இதோ

ஆரோக்கியமான உணவு

    ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிடுவது நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுவதன் மூலம் நம் முகத்தில் கொழுப்பை குறைக்கும்.

நல்ல தூக்கம்

    தினமும் இரவில் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நன்றாக உறங்குவதால் உடல் கொழுப்பை கரைத்து, முகத்தையும் உடலையும் அழகாக மாற்ற முடியும்.

உடல் எடை மேலாண்மை

    உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைத்தால் முகத்தில் உள்ள கொழுப்புகளும் தானாக குறையும்.

அதிக தண்ணீர்

    உணவுக்கு முன் தண்ணீர் அருந்தினால், அது பசியை குறைக்கவும், குறைவாக சாப்பிடவும் பெரிதும் உதவும் முகத்தில் கொழுப்பு படிவதையும் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்