தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் உடல் எடையைக் குறைக்க முடியுமா?


Jansi Malashree V
21-10-2024, 13:56 IST
www.herzindagi.com

    அதிகரித்த உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் குறைந்தளவு 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் நல்ல ரிசஸ்ட் கிடைக்குமாம். எப்படி தெரியுமா? அதன் விபரம் இங்கே.

தண்ணீர் குடித்தல்:

    உடலை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக 500 -1000 மிலி தண்ணீர் குடிக்க வேண்டும்.

மெதுவாக சாப்பிடுதல்:

    சீக்கிரம் பணிக்குச் செல்ல வேண்டும் என அவசரமாக சாப்பிடக்கூடாது. மெதுவாக மென்று சாப்பிடுவதனுடன் தண்ணீரும் உடன் சேர்ந்து குடிக்க வேண்டும். வயிற்றில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கும்.

பசி ஏற்படாது:

    அதிகளவு தண்ணீர் குடிக்கும் போது வயிற்று நிரம்பியது போன்ற மனநிலை ஏற்படும். தேவையில்லாத உணவுகள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

சீரான செரிமானம்:

    தினமும் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் உட்கொள்ளும் போது செரிமானம் மேம்படுவதோடு, அதிக கலோரிகள் உட்கொள்ளலையும் குறைக்க முடியும்.

    உடல் எடையைக் குறைக்க இதுபோன்ற முறைகளில் தண்ணீர் குடிப்பதோடு,தேவையில்லாத நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.