உங்கள் உணர்ச்சிகளை சமிக்ஞை செய்யும் உடல் அறிகுறிகள்


Alagar Raj AP
12-04-2025, 09:08 IST
www.herzindagi.com

உணர்ச்சியின் உடல் அறிகுறிகள்

    உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கூறி தான் தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. உடல் அறிகுறிகளே உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை உடையது. அப்படி உணர்ச்சிகளுக்கும், உடலுக்கும் இடையே உள்ள தொடர்பை இங்கு காண்போம்.

தலைவலி

    அதிக கவலை அல்லது மன அழுத்தமாக உணரும் போது தலைவலி ஏற்படும்.

கழுத்து வலி

    நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு பிடிவாதமாக இருக்கும் போது அல்லது ஏதேனும் ஒரு செயலுக்கு ஏற்று நடக்காத போது உங்களுக்கு கழுத்து வலிக்கும்.

செரிமான பிரச்சனைகள்

    அதிகப்படியான சிந்தனை அல்லது மகிழ்ச்சியாக இருக்கும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

கால் நடுக்கம்

    நீங்கள் பயமாக உணரும் போது அல்லது பதட்டமாக இருக்கும் போது கால்கள் வேகமாக நடுங்கும்.

கை நடுக்கம்

    தனிமையில் இருப்பது பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக கைகள் நடுங்கும்.

மார்பு வலி

    மார்பில் வலி அல்லது இறுக்கமாக உணர்ந்தால் அது கோபத்தின் வெளிப்பாடாக இருக்கும்.