கடலோர பகுதிகளில் கிடைக்கும் இந்த தட்டையான மீன் வகையில், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இயற்கையாகவே அமோனியாவின் வாசம் கொண்ட இந்த மீனின் நற்பலன்களை இப்பதிவில் பார்க்கலாம்.
Image Credit : google
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
திருக்கை மீனில் வைட்டமின் D, E, B1, B2, B6, B12, ஃபோலேட் மற்றும் சிறிதளவு வைட்டமின் C யும் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
Image Credit : freepik
பெண்களுக்கு உகந்தது
திருக்கை மீன் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை குறைக்கிறது.
Image Credit : freepik
கால்சியம் நிறைந்தது
உடல் எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் சத்துக்கள் அத்தியாவசியமானது. திருக்கை மீனில் நிறைந்துள்ள கால்சியம், பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களை பாதுகாக்கின்றன.
Image Credit : freepik
நோய்களை விரட்டும்
திருக்கை மீன் இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய், நீரிழிவு மற்றும் பிற அழற்சி சார்ந்த பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை திருக்கை மீனை சாப்பிட முயற்சி செய்யலாம்.
Image Credit : freepik
தசை வளர்ச்சி
இதில் நிறைந்துள்ள புரதம் வலுவான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
Image Credit : freepik
மூளை வளர்ச்சி
திருக்கை மீன் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இது நினைவாற்றல் இழப்பு நோயான அல்சைமர் நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
Image Credit : freepik
மற்ற நன்மைகள்
திருக்கை மீன் சாப்பிடுவது கண் பார்வையை மேம்படுத்தகிறது.
இதில் உள்ள சத்துக்கள் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.