அனைவருக்கும் தேவையான 7 வகையான ஓய்வுகள்!


Alagar Raj AP
04-06-2024, 12:08 IST
www.herzindagi.com

மன ஓய்வு

    அனைத்து நேரமும் இயங்கும் மனதிற்கு சிந்தனை, உணர்வு போன்றவற்றில் இருந்து ஓய்வு கொடுங்கள். அதற்கு தியானம் அல்லது அமைதியான நடைப்பயிற்சியை முயற்சியாகவும்.

உணர்திறன் ஓய்வு

    உணர்திறன் ஓய்வு என்பது மொபைல், கணினி, தொலைக்காட்சி போன்ற திரைகளில் ஈடுபடுவதை துண்டித்து கொஞ்சம் அமைதியான நேரத்தை அனுபவிக்கவும்.

உடல் ஓய்வு

    நன்றாக தூங்கி, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி செய்து உடலை தளர்வாக்கி ஓய்வெடுக்கவும். இது உங்களுக்கு அடுத்த செயலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

ஆன்மீக ஓய்வு

    ஆன்மீக ஓய்வு என்பது கடவுள் நம்பிக்கையில் இருந்து ஓய்வெடுத்து கடவுளுக்கு சேவை செய்வதில் இருந்து சற்று விடுப்பு எடுத்து இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள்.

சமூக ஓய்வு

    சமூகத்தில் இருந்து விலகி உங்களுக்கு நெருங்கிய நபர்களுடன் அல்லது தனியாக நேரத்தை செலவிடுங்கள். இது உங்களை நீங்களே உணர செய்யும்.

உணர்ச்சி ஓய்வு

    நீங்கள் உணர்ச்சி ரீதியாக தாழ்வாக இருக்கும் போது உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கு உண்மையாக இருங்கள். இதனால் நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.

படைப்பு ஓய்வு

    நீங்கள் புத்தகம் எழுதுபவராக, ஓவியராக அல்லது பொறியாளராக, எந்த படைப்புகளில் ஈடுபடும் போதும் அதிலிருந்து விலகி மனது மற்றும் உடல் ரீதியாக ஓய்வெடுத்தால் புது யோசனைகள் கிடைக்கும்.