தலையணை இல்லாமல் தூங்குவதால் இத்தனை நன்மைகள் இருக்கா?


Alagar Raj AP
10-12-2024, 18:10 IST
www.herzindagi.com

    பலருக்கு தலையணை இருந்தால் தான் நிம்மதியாக தூங்க முடியும். ஆனால் தலையணை இல்லாமல் தூங்குவதால் உடலுக்கு சில நன்மைகள் உள்ளது. அது என்ன நன்மைகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதுகு வலி குறையும்

    நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுபவராக இருந்தால் தலையணை வைத்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும். இதனால் முதுகு வலி குறையும்.

கழுத்து வலி குறையும்

    தலையணை இல்லாமல் தூங்குவது கழுத்து வலியிலிருந்து விடுபட உதவும். தலையணை இல்லாமல் தூங்கும் போது கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், இதனால் கழுத்து வலி குறையும்.

சருமம் மற்றும் முடி

    பொதுவாக தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விட தலையணை வைத்து தூங்குபவர்களுக்கு சருமம் மற்றும் முடி பிரச்சனை அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. தலையணையில் படியும் வியர்வை மற்றும் தூசி முகப்பரு மற்றும் முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கிறது. தலையணை இல்லாமல் தூங்கினால் இந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.

தலைவலி குறையும்

    பொதுவாக சிலருக்கு காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படும். இதற்கு நீங்கள் உயரமான தலையணையில் தூங்குவதால் தலைக்கு செல்லும் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளை குறையும். இதனால் காலையில் தலைவலி ஏற்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தலையணையில் தூங்குவதை தவிர்க்கலாம்.

உடல் தோரணை மேம்படும்

    தலையணையில் தூங்கும் போது உங்கள் கழுத்து வளைந்த நிலையில் நீண்ட நேரம் இருக்கும். இது காலப்போக்கில் நிரந்தரமான வளைந்த கழுத்தை ஏற்படுத்தும். ஆனால் தலையணை இல்லாமல் தூங்குவதால் கழுத்து நேராக மாறும், உங்கள் தோரணையை அதிகரிக்க முடியும்.

சிறந்த தூக்கம்

    தலையணை இல்லாமல் தூங்கும் போது மூளை பகுதிக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் குறைத்து சிறந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும்.