உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் 5 நிமிட மூச்சு பயிற்சிகள்
Alagar Raj AP
21-02-2025, 12:42 IST
www.herzindagi.com
உயர் இரத்த அழுத்தம்
இன்றைய காலகட்டத்தில் உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த நாளங்கள் வழியாக இயல்பை விட அதிக அழுத்தத்தில் இரத்தம் பாய்வதை குறிக்கிறது.
விளைவுகள்
உயர் இரத்த அழுத்தம் எந்த அறிகுறிகளையும் காட்டாமல், காலப்போக்கில் கடுமையான இதய பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், பாலியல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இரத்த அழுத்த அளவு
நமது உடலின் சாதாரண இரத்த அழுத்தம் 120/80 mmHg ஆக வரையறுக்கப்படுகிறது. இதை விட அதிகமான அழுத்தம் உயர் இரத்த அழுத்தமாக கருதப்படுகிறது. எனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவக்கூடிய 5 நிமிட சுவாசப் பயிற்சிகள் இதோ.
ஆழ்ந்த சுவாசம்
உங்கள் மூக்கின் வழியாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சை சில நொடிகள் பிடித்து, வாய் வழியாக மெதுவாக மூச்சை வெளியேற்றவும். இந்த ஆழ்ந்த சுவாச பயிற்சியை தொடர்ந்து 5 நிமிடம் செய்யுங்கள்.
4-7-8 பயிற்சி
இந்த பயிற்சியும் ஆழ்ந்த சுவாச பயிற்சியை போன்று தான். ஆனால் வினாடிகளை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் மூக்கின் வழியாக 4 வினாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும். உள்ளிழுத்த மூச்சை 7 விநாடிகள் பிடித்து வைத்து, 8 வினாடிகள் உங்கள் வாய் வழியாக மூச்சை முழுமையாக வெளியேற்றவும்.
உதட்டால் சுவாசித்தல்
உங்கள் மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும். அதன் பின் மெழுகுவர்த்திகளை ஊதுவது போல உங்கள் நாக்கை மடக்கி மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.
சதுர சுவாச பயிற்சி
உங்கள் மூக்கு வழியாக 4 வினாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும். தொடர்ந்து 4 வினாடிகள் மூச்சை பிடித்து வைத்திருங்கள். அதன் பின் வாய் வழியாக 4 வினாடிகள் மூச்சை வெளியியற்றுங்கள். இப்படி தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்யவும்.
5 நிமிட பயிற்சி
இதில் ஏதேனும் ஒரு பயிற்சியை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்வது உடலை தளர்வடைய செய்து மன அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.