சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தினசரி 10 பழக்கங்கள்


Alagar Raj AP
10-03-2025, 12:57 IST
www.herzindagi.com

போதுமான தூக்கம்

    போதுமான தூக்கம் இல்லாவிட்டால் உடல் எளிதில் சோர்வடையும். அதனால் தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.

சூரிய ஒளி

    தினமும் காலை சூரிய ஒளியில் உங்கள் உடலை வெளிப்படுத்துங்கள். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

உணவு பழக்கம்

    வைட்டமின்கள், புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள். இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

உடற்பயிற்சி

    தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது யோகா செய்வது உடல் வலிமையையும், மன நிலையையும் மேம்படுத்தும்.

தண்ணீர் குடிக்கவும்

    போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதன் மூலம் உடலின் ஆற்றலைப் பராமரித்து சோர்வை குறைக்க முடியும்.

நேர்மறையான மனநிலை

    நேர்மறை சிந்தனைகள் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும். இதன் மூலம் உங்கள் தினசரி செயல்பாட்டை ஊக்குவிக்க முடியும்.

காஃபினை தவிர்க்கவும்

    காபி, டீ போன்ற காஃபின் பானங்கள் சோர்வை குறைத்து சுறுசுறுப்பாக உணர செய்தாலும் இதனால் உடலில் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். காஃபின் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். இதனால் சில மணி நேரங்களுக்கு பிறகு நீங்கள் அதிக சோர்வாக உணர்வீர்கள்.

ஓய்வு

    நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்தால் சோர்வு அதிகரிக்கும். அதனால் ஒவ்வொரு 1 முதல் 2 மணி நேரத்திற்கும் 5 முதல் 10 நிமிட ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இது சோர்வை போக்கி வேலையில் கவனத்தை அதிகரிக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

    உடல் பலவீனம் மற்றும் சோம்பலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக உள்ளன. அதனால் மனதை அமைதியாக வைத்திருக்க இசையை கேட்பது, வெளியை செல்வது போன்ற உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு

    உடலில் இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி12 பற்றாக்குறையால் சோர்வு ஏற்படலாம். அதனால் உங்கள் உணவு முறையை அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.