புத்தாண்டு தினத்தன்று செய்து சுவைக்க வேண்டிய அல்வா ரெசிபிக்கள்!!!
Shobana Vigneshwar
28-12-2022, 13:20 IST
www.herzindagi.com
இனிப்புகள்
குளிர்காலத்தில் ஏதாவது சூடாக சாப்பிட்டால் இதமாக இருக்கும். காரசாரமான உணவுக்குப் பதிலாக இனிப்பான அல்வாக்களை சுவைக்க ஆசைபடுகிறீர்களா? இந்தப் பதிவில் விதவிதமான, சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய அல்வா ரெசிபிகளை படித்து, உங்களுக்குப் பிடித்த ஒன்றை புத்தாண்டில் செய்து ருசிக்கலாமே!
Image Credit : freepik
வெல்லம் அல்வா
இந்த குளிர்காலத்தில், வெல்லத்தை கொண்டு வீட்டிலேயே அல்வா செய்து சாப்பிடுங்கள். இது உடலை சூடாக வைத்திருப்பதோடு, உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
Image Credit : freepik
கோதுமை அல்வா
கோதுமை மாவு, வெல்லம், தேங்காய் துருவல் மற்றும் உலர் பழங்களைக் கொண்டு சுவையான கோதுமை அல்வா செய்யலாம். குளிர் காலத்திற்கு ஏற்ற இந்த அருமையான அல்வாவை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
Image Credit : freepik
பாசிப்பருப்பு அல்வா
இது எல்லா வீட்டு விசேஷங்களுக்கும் உகந்தது. அல்வாவின் சுவையை அதிகரிக்க வறுத்த உலர் பழங்களை அதன் மீது தூவி பரிமாறலாம்.
Image Credit : freepik
பூசணிக்காய் அல்வா
உங்கள் குழந்தை பூசணிக்காய் சாப்பிட மறுத்தால், அதனை கொண்டு சுவையான அல்வா செய்து கொடுங்கள். குழந்தைக்கு ஆரோக்கியமான அல்வாவை செய்து கொடுத்த திருப்தியும் உங்களுக்கு இருக்கும்.
Image Credit : freepik
பீட்ரூட் அல்வா
பீட்ரூட் இரத்த சோகையை நீக்கும். இதைக் கொண்டு அல்வா செய்யும்பொழுது, சுவையான அல்வாவை ஆரோக்கியமானதாகவும் மாற்றலாம். குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
Image Credit : freepik
பேரிச்சம் பழம் அல்வா
பேரிச்சம் பழம், தேங்காய் துருவல், பால் மற்றும் உலர் பழங்களைக் கொண்டு இந்த அல்வா தயாரிக்கப்படுகிறது. குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
Image Credit : freepik
கடலைமாவு அல்வா
கடலை மாவு உஷ்ண தன்மை கொண்டது. குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக்கொள்ள, கடலை மாவில் அல்வா செய்து சாப்பிடலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
நீங்களும் இனிப்பு பிரியராக இருந்தால் இந்த அல்வா ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.